ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன் நடத்திய கொடூரம்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம் | Thoothukudi
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொன்ற கணவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளையைச் சேர்ந்த தம்பதி பிரபாகரன் - ஆஷா. தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி பிரபாகரன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற பிரபாகரன், தானும் விஷமறிந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தம்பதியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.