கேரள மாநிலத்தில் பரவலாக மழை தொடர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை பெய்யும் பகுதிகளில், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடற்கரையோரங்களில் உயரமான அலைகள் எழ வாய்ப்பு உள்ளதோடு, கள்ளக்கடல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.