கேரளாவிற்கு காத்திருக்கும் அடுத்த அடி - வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

Update: 2024-08-02 10:57 GMT

கேரளாவில், ஜூலை 1 முதல் 31ம் தேதி வரை, 16 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூலையில் சராசரியாக 653.5 மில்லிமீட்டர் மழை பெய்வதற்கு பதிலாக, 760.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலான பருவமழை காலத்தில் மொத்த மழையளவு 4 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் சீசன்-படி, வயநாடு தவிர, மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் இம்மாதம் இயல்பை விட, அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் வயநாட்டில் நான்கு சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

கண்ணூரில் 65 சதவீதமும், பாலக்காட்டில் 49 சதவீதமும், மலப்புரத்தில் 36 சதவீதமும், கோழிக்கோட்டில் 26 சதவீதமும்

திருவனந்தபுரத்தில் 24 சதவீதமும், எர்ணாகுளத்தில் 9 சதவீதம், ஆலப்புழாவில் 7 சதவீதமும், இடுக்கியில் 15 சதவீதமும் பதிவாகியுள்ளது. 22 சதவீதம் அதிக மழைபொழிவுடன் கண்ணூர் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்