தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு திருப்பதியில் அனுமதி மறுப்பு-களத்தில் இறங்கி தெறிக்க விட்ட சேகர்பாபு

Update: 2024-07-16 12:20 GMT

ஆனிவார ஆஸ்தானத்திற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது. அதை ஏழுமலையானிடம் சமர்ப்பிக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான குழுவினர் கோவிலுக்கு சென்றனர். 10 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 8 பேரை மட்டுமே அனுமதித்து தேவஸ்தான அதிகாரிகள் 10 பேர் என கூறியுள்ளனர்.

அறநிலையத்துறை ஆணையர் மாரியப்பன் உள்பட இருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களை கண்டித்த அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளை அனுமதிக்க வலியுறுத்தினார். பின்னர் ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள், ஆணையர் உள்பட இருவரையும் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்