கேரள நடிகை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.. வெளியே வரும் கொடூரன் -உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
கேரளாவில் நடிகை கடத்தி, துன்புறுத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான பல்சர் சன்னிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 2017ம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கில், ஜாமின் கேட்ட பல்சர் சன்னிக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை குறித்து கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது. விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், பல்சர் சன்னி ஏற்கனவே ஏழரை ஆண்டுகளாக சிறையில் இருந்திருப்பதாகவும், விசாரணை தாமதம் ஆவதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.