வசமாக சிக்கிய போலி சாமியாரின் சில்மிஷ வழக்கு... கோர்ட் போட்ட பரபரப்பு உத்தரவு
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள ஆசிரமத்தில், ஒரு பெண்ணை, தொடர் பாலியல் வல்லுறவு செய்ததாக ஆசாராம் பாபுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் பாபுவை குற்றவாளி என கடந்த ஆண்டு ஜனவரியில் தீர்ப்பு கூறி, ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும், ஆசாராம் பாபுவின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.