நாட்டை உலுக்கிய 7 குழந்தைகள் பலி சம்பவம்... தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள்

Update: 2024-05-28 08:47 GMT

கடந்த சனிக்கிழமை இரவு 10:55 மணி அளவில் மருத்துவமனையின் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு இரவு 11.30 மணிக்கு தான் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கைது செய்யப்பட்டுள்ள மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி சமர்ப்பித்த கட்டிடத் திட்டத்தின்படி, இது போன்ற அவசர காலங்களில் கட்டிடத்தில் இருந்து வெளியேற இரண்டு வழிகள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் பின்பக்க கதவு இயந்திரங்கள் மற்றும் மருந்து பொருட்களால் கொண்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தது‌. அதோடு வெறும் ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி கொண்ட மருத்துவமனையில் பலமுறை ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை அனுமதித்து சிகிச்சை அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் , மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ஆம் தேதி உடன் காலாவதியாகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் உரிய தகுதி பெறாதவர்கள் என்பதும் அவர்களை அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தில் இளங்கலை பட்டம் மட்டுமே பெற்றவர்கள் என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்