காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். அவதூறு வழக்கில் தண்டனை தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக அங்கீகரித்து, நாடாளுமன்ற செயலாளர் அறிவித்தார். அதன்பின்னர் ராகுல் காந்தி மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். இந்நிலையில், தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு 2 நாள் பயணமாக, வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.