இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதலமைச்சர் நிறைவேற்றி வரும் திட்டங்கள், அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில், சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தங்கள் நடைபெற்றிருப்பது தொழில் வளர்ச்சியில் இல்லாத மாபெரும் புரட்சி என கூறப்பட்டுள்ளது.