ரூ.2500 கோடி முதலீடு-தமிழகத்தில் களமிறங்கும் ஸ்பெயின் நிறுவனம்-1000 பேருக்கு வேலை.. முதல்வர் அதிரடி

Update: 2024-02-01 09:30 GMT

சர்வதேச அளவில் முன்னணியாக உள்ள ஹபக் லாய்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹபக் லாய்ட், தமிழகத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்