டெல்லியில் கிளப் ஒன்றின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... டெல்லி சீமாபுரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிளப் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் பெண் பவுன்சர் உள்ளிட்ட பவுன்சர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வானத்தை நோக்கி சுடும் காட்சிகள் பதைபதைப்பூட்டுகின்றன. கிளப்பின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.