நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்த 245-வது அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

Update: 2023-09-28 14:43 GMT

சிறைத்துறைகளின் நிலை, உட்கட்டமைப்புகள், சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில், அண்மையில் உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்த 245-வது அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைகளில் கஞ்சா, அலைபேசி அடிக்கடி கடத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சிறைக்குள் கஞ்சாவை கடத்த கவண் மூலம் தூக்கி வீசும் நடைமுறை பெருமளவில் கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கைதிகள், சிறைக்கு வெளியே குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரும்பாலும் அலைபேசி பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது. சிறைக் கைதிகளின் கையில் புழங்கும் அலைபேசிகள், சிறைக்கு உள்ளே மோதல் ஏற்படுவதற்கு தூண்டுதலாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறைப் பணியாளர்கள், தடை செய்யப்பட்ட பொருட்களை பெற கைதிகளுக்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்