"140 கோடி மக்களுக்கு நிவாரணம்" - மத்திய அரசு அதிரடி முடிவு

Update: 2023-08-10 08:50 GMT

50 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது..வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம், 50 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் இ-ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.140 கோடிக்கும் அதிகமான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கிடைப்பதை அதிகரிப்பதற்கும், சந்தை விலை உயர்வு மற்றும் உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், கோதுமை மற்றும் அரிசியை தனியாருக்கு விற்க, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், 2023 ஜனவரி1 முதல் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு, உணவு தானியங்களை அரசு விலையில்லாமல் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்