ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் - அதிகாரி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

Update: 2024-02-09 17:14 GMT

சித்ரதுர்கா மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர் அபிஷேக் என்பவர், பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய வீடியோ படப்பிடிப்பு செய்ய முடிவு செய்துள்ளார். வழக்கமாக பூங்கா, கடற்கரை அல்லது அடர்ந்த காட்டில் போட்டோ ஷூட் நடத்தப்படும் நிலையில், இந்த ஜோடி வித்தியசமாக அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரிலேயே போட்டோ ஷூட் நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரை தவறாக பயன்படுத்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்