பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த நாள் கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அந்த கேக்கில் அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டி கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாட்டியாலாவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி, பிறந்த நாள் விழா நடந்தபோது, கேக்கை சாப்பிட்ட சிறுமி உள்பட குடும்பத்தினர் அனைவரும் மயக்கம் அடைந்தனர். அவர்களில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கேக் மாதிரியை எடுத்துச் சென்று பரிசோதனை செய்ததில், 'சாக்கரீன்' எனப்படும் செயற்கை இனிப்பூட்டி அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது. சாக்கரீன் ரசாயனம், ரத்தத்தில் சர்க்கரையை வேகமாக அதிகரிக்கச் செய்து, உடல்நிலையை பாதிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.