"நாசாவை போல புது ஆராய்ச்சி மையம்..." - தமிழக அரசுக்கு வந்த கோரிக்கை

Update: 2024-08-23 17:31 GMT

சென்னை கலைவாணர் அரங்கில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில் 'இளம் விஞ்ஞானி இந்தியா 2024' என்ற போட்டி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப் படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஷ்யா, கஜகஸ்தான் நாடுகளின் விண்வெளி வீரர்கள், மாணவர்களை வெகுவாக பாராட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி, தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார். மேலும், விண்வெளி ஆராய்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பதால், நாசாவைப் போலவே குலசேகரப்பட்டினத்திலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்