மோடியின் மெகா அறிவிப்பு..! ரூ.6,100 கோடியில் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

Update: 2024-10-21 02:41 GMT

மோடியின் மெகா அறிவிப்பு..! ரூ.6,100 கோடியில் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் | மோடி

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் 6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான பல்வேறு விமான நிலைய திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, ஆக்ரா விமான நிலையத்தில் 570 கோடி ரூபாய் மதிப்பிலும், தர்பங்கா விமான நிலையத்தில் 910 கோடி ரூபாய் மதிப்பிலும், பாக்தோக்ரா விமான நிலையத்தில் ஆயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பிலும் புதிய சிவில் என்கிளேவ் கட்டுவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர, ரேவா விமான நிலையம், மகாமாயா விமான நிலையம், அம்பிகாபூர் மற்றும் சர்சவா விமான நிலையங்களில் 220 கோடி ரூபாயில் புதிய முனையக் கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்தார்.

சாரநாத்தில் புத்தமதம் தொடர்பான பகுதிகளின் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்