ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை இணைக்கும் சாலையில், முந்திரி தோல் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சாலை ஓரத்தில் இருந்த விளைநிலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்த நிலையில், மினி லாரியின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்த 7 தொழிலாளர்களும், அடிப்பக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ட்ரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவருடன் அமர்ந்திருந்த மற்றொரு நபர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நபர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.