`ஓட்டுக்கு பணம் கொடுத்தால்..' - எச்சரித்த வருமான வரித்துறை

Update: 2024-03-17 16:19 GMT

மக்களவை பொதுத்தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணிக்க வருமான வரித்துறை இயக்குநரின் உதவியை இந்தியத் தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. தேர்தல் செயல்பாட்டில் கணக்கில் காட்டப்படாத நிதிகளின் பங்களிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் மற்றும் இலவச பொருட்களை விநியோகித்தால், வருமான வரி அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று வருமானவ வரித் துறை தெரிவித்துள்ளது. தகவலை பகிர்ந்து கொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்