ஏர்போர்ட்டில் இருவரை பிடித்து வயிற்றில் ஆபரேஷன் செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்...

Update: 2024-06-24 06:01 GMT

ஏர்போர்ட்டில் இருவரை பிடித்து வயிற்றில் ஆபரேஷன் செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்...வயிற்றுக்குள் ரூ. 19 கோடியா?

எத்தியோப்பியாவில் இருந்து கொச்சினுக்கு விமானம் மூலம் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த எத்தியோபியா நாட்டை சேர்ந்த இருவரை, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் பதிலளித்த தான்சானியாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஆணை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், வயிற்றில் மறைத்து வைத்து சுமார் 100 போதை மாத்திரைகளை இருவரும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அறுவை சிகிச்சை மூலம் ஆயிரத்து 945 கிராம் எடையுள்ள மாத்திரைகளை வெளியே எடுத்தனர். போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் 19 கோடி என கூறிய அதிகாரிகள், இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்