கேரள மாநிலத்தையே அதிரவிட்ட ஒரு தகவல் | Kerala | EB Bill

Update: 2024-07-30 04:54 GMT

கேரளாவில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதை சரி செய்வது தொடர்பாக கேரளா அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். பகல் நேரம் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை குறைக்கவும் ஆலோசித்து வருவதாகவும்,

கேரளாவில் அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார். பரந்த விவாதத்துக்கு பிறகே, அணுமின் திட்டம் குறித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் விளக்கமளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்