கேரளாவில் அமைச்சர்கள் ராஜினாமா..29ஆம் தேதி பதவியேற்கும் புதிய அமைச்சர்கள்
ஐந்து ஆண்டு அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் அமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் அமைச்சராகவும் இருப்பது என முடிவெடுத்தன.
இதன்படி, காங்கிரஸ் எஸ் கட்சியின் அமைச்சராக அகமது தேவர் கோவிலும், காங்கிரஸ் பி கட்சியின் சார்பில் ஆன்றணி ராஜுவும் அமைச்சர்களாயினர். இவர்கள் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி, இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எஸ் கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் கடனப்பள்ளி, காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த நடிகர் கணேஷ் குமார் ஆகிய இருவரும் வரும் 29ஆம் தேதி அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.