`டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி.. நடக்கும் முன்னேற்பாடு' - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு கூட்டங்களில் அதிகாரிகள் யாரும் பங்கேற்பது இல்லை என்றும், இதனால், ஆம்ஆத்மி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், துணை நிலை ஆளுநர் மூலம் டெல்லி அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அதிஷி விமர்சித்துள்ளார்.