சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி போராட்டம்.. பெங்களூரில் பரபரப்பு

Update: 2024-09-26 11:30 GMT

மைசூர் நகர மேம்பாட்டு கழகத்தில் முறைகேடாக 14 மனைகளை தனது மனைவிக்கு பெற்று தந்ததாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மூன்று தனிநபர் புகார்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆளுநரின் முடிவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ

நீதிமன்றம், முதல்வர் சித்தராமையா மீது மைசூர் நகர லோக் ஆயுக்தா துணை கண்காணிப்பாளர், சி.ஆர்.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நில முறைகேடு வழக்கில் சிக்கியிருக்கும் முதல்வர் சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் கர்நாடக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்