டன்கணக்கில் கணவா கொள்ளை.. நிர்கதியில் 500 குடும்பங்கள்.. தூத்துக்குடி மீனவர்கள் பகீர்

Update: 2024-08-26 09:22 GMT

டன்கணக்கில் கணவா கொள்ளை.. நிர்கதியில் 500 குடும்பங்கள்.. தூத்துக்குடி மீனவர்கள் பகீர்

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடல் பகுதியில் சட்ட விரோதமாக ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதை அரசு தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேம்பார் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர், தூண்டில் மூலம் கனவா மீன்களை மட்டுமே பிடித்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த சில தினங்களாக தூத்துக்குடி மற்றும் வேம்பாரை சேர்ந்த மீனவர்கள் சிலர், கேஸ் சிலிண்டர், ஏர் கம்ப்ரசர் உதவியுடன் ஆழ்கடலுக்குள் சென்று சுவாசித்து, ஆபத்தான முறையில் கடல்வாழ் உயிரினங்களை அதிக அளவில் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கனவா மீன்களின் இனப்பெருக்கமும் பாதிப்படும் சூழ்நிலை உண்டாவதாகவும் வேம்பார் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், தடையை மீறுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேம்பார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமதிக்கும்பட்சத்தில், பலகட்ட போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்