இந்தோனேசியாவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால், 31 பேர் உயிரிழந்தனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். சாலைகளும் சேதமடைந்தன. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கனமழை வெள்ளத்துக்கு 31 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேரை காணவில்லை என்றும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.