"நாங்க பிரச்சாரத்துக்கு போனால்.. சட்டவிரோதமா அனுப்புவாங்க" - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் சட்டவிரோதமானது என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் தான் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய, பா.ஜ.க. உத்தரவின்பேரில் அனுப்பியுள்ள இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அமலாக்கத்துறை முன்பு ஆஜராக மாட்டார் என கூறப்படுகிறது.