இந்தியன் பட எஃபெக்ட்.. - மனைவியை சிக்க வைத்த கணவர்.. | Hyderabad | ThanthiTV

Update: 2024-10-10 02:50 GMT

ஐதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக இருப்பவர் திவ்ய ஜோதி. துட்டு வாங்காம எந்த வேலையையும் செய்யமாட்டார் போல என சொல்லும் அளவிற்கு அவரது வீட்டிலிருந்து காட்சிகள் வெளியாகியிருக்கிறது. தினசரி லஞ்சம் வாங்கும் திவ்ய ஜோதியின் அட்டகாசம் தாங்க முடியாது அவரது கணவரே காட்டிக் கொடுத்துள்ளார். எங்க வீட்டுல இருக்க லஞ்ச பணத்தை பாருங்க என அவர் வெளியிட்ட வீடியோதான் தெலங்கானா மட்டுமல்ல இந்தியாவுக்கான அதிர்ச்சி செய்தியாக இணையத்தில் வைரலாகி வருகிறது. திவ்ய ஜோதி எங்கெல்லாம் பணத்தை வைத்திருக்கிறார் பாருங்க என, வீட்டில் பூஜை அறை சோபா, படுக்கை அறை, புடவையில் பண்டல் பண்டலாக புதைந்திர பணத்தை எல்லாம் வீடியோவா போட்டுள்ளார். ஐதராபாத்தில் மணி கொண்டாவில் ஒப்பந்தம் பெறுவோரிடம் மணியை வாங்காமல் கொடுக்கமாட்டார் போல என பேசப்பட்டு வருகிறது. மனைவி தினசரி லஞ்ச பணத்தோடோ வீட்டுக்கு வருவதாகவும், கிட்டதட்ட 30 லட்சம் ரூபாய் வரையில் இருப்பதாகவும் கணவர் போட்ட வீடியோ தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்