மிலாடி நபியில் சார்மினாரில் விபரீதம்.. உயிரை பிடித்து ஓடிய மக்கள் - பதற்றம்.. பரபரப்பு

Update: 2024-09-20 08:30 GMT

 ஐதராபாத்தில் நடைபெற்ற மிலாடி நபி கொண்டாட்டத்தின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐதராபாத்தின் முக்கிய அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடம் அருகே நேற்று இரவு நடைபெற்ற மிலாடி நபி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிஜே கச்சேரி நடத்தப்பட்டது. இதற்கு தேவையான மின்சாரத்தை ராட்சத ஜெனரேட்டரை கொண்டு வந்து அதிலிருந்து எடுத்து பயன்படுத்தினார்கள். அப்போது திடீரென்று அந்த ஜெனரேட்டரில் தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் கரும்புகை வெளியேறியது. இதனால் கச்சேரியை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்