எந்தவொரு மனைவிக்கும் வர கூடாத கொடுமை.. படுகொலையான கணவனின் ரத்தத்தை.. அழுதுகொண்டே.. ரணமாக்கும் வீடியோ

Update: 2024-11-02 09:11 GMT

எந்தவொரு மனைவிக்கும் வர கூடாத கொடுமை.. படுகொலையான கணவனின் ரத்தத்தை.. அழுதுகொண்டே.. ரணமாக்கும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் திந்தோரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் ரத்தம் தோய்ந்த அரசு மருத்துவமனை படுக்கையை கர்ப்பிணி சுத்தம் செய்ய வற்புறுத்தப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லால்பூர் கிராமத்தில் நில பிரச்சினை காரணமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தி துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிவாஜி என்பவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பலியான நிலையில், அவரது 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவரின் ரத்தம் தோய்ந்த மருத்துவமனை படுக்கையை சுத்தப்படுத்துமாறு கூறியதாகத் தெரிகிறது. அவர் அழுதுகொண்டே சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அந்தப் பெண் சாட்சிக்காக ரத்தம் தோய்ந்த ஆடையின் துண்டுகளை சேகரித்ததாகவும், படுக்கையை சுத்தம் செய்யக் கூறவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. போலீசார் கொலை வழக்கு தொடர்பாக 4 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்