இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்தது.
மணாலியில் உள்ள பல்சான் பகுதியில் அதிகாலையில் மேகவெடிப்பு ஏற்பட்டது. பல்சான் பாலத்தில் பாறைகள் குவிந்ததால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடு இடிந்து விழுந்தது. மேலும், ஆற்றில் கட்டப்பட்ட மின் திட்டம் சேதமடைந்ததால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 27 முதல் 30-ம் தேதி வரை, பல பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.