கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் இளைஞரை வெளுத்தெடுத்த கும்பல்.பிரசாதத்தை எடுத்துசாப்பிட்டதால் கொலை?

Update: 2023-09-28 11:39 GMT

மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர், அங்கு வைத்திருந்த பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.வடகிழக்கு டெல்லியான சுந்தர் நாக்ரி பகுதியில் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 26 வயதான இசார் அகமது என்ற இளைஞர், கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கட்டைகளாலும், பெல்ட்டாலும் கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். இதில், படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், அங்கு நடைபெற்ற மத நிகழ்ச்சியில் இசார் அகமது கலந்து கொண்டதாகவும் , அங்கு வைத்திருந்த பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டதால் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்