அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் இஸ்ரோ - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

Update: 2024-09-19 02:30 GMT

ககன்யான், சந்திரயான்-4, சர்வதேச விண்வெளி நிலையம் என அடுத்தடுத்த திட்டங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முழு வீச்சில் தயாராகி வருகிறது.இந்த ஆண்டுக்கான ஸ்பேஸ் எக்ஸ்போ விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி, பெங்களூரில் தொடங்கி உள்ளது. இதில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான்-4 ஆகிய திட்டங்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.இஸ்ரோவின் அடுத்த திட்டங்கள் குறித்து பேட்டியளித்த விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன், இந்த ஆண்டு இறுதிக்குள் ககன்யான் விண்வெளி பயணத்தின் முதல் விமானம் சாத்தியமாகும் என்று கூறினார். ஆளில்லா பயணம் வெற்றிபெற்ற பிறகு, விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு நமது ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார்.இந்த திட்டங்களை செயல்படுத்த, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலும் இரவு பகலாக விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்