விபரீதம் அறியாமல் அலட்சியம் செய்தவர்களை வாரி சுருட்டி சென்ற வெள்ளம்.. மரண பயம் காட்டும் காட்சிகள்

Update: 2024-09-02 04:49 GMT

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில், கனமழையால் வீடுகள் இடிந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதனிடையே, என்.டி.ஆர் மாவட்டத்தில் அலட்சியமாக ஒற்றைக் கையால் கயிற்றை பிடித்து வெள்ளத்தை கடக்க முயன்ற நபரை, வெள்ளம் இழுத்துச் சென்றது. அருகிலுள்ள மரக்கிளையை பிடித்துக் கொண்ட அவரை, பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்