மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்... வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்... அதேபோல் சண்டிகர், தமிழ்நாடு மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது... 40 நாட்களில் தங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்காது என்பது போராட்டத் தொடக்கத்திலே தங்களுக்குத் தெரியும் என்றும், தொடர்ந்து பலத்தை அதிகரித்து போராட்டத்தைத் தொடருவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.