சபரிமலையில் வெடித்த சர்ச்சை.. 18ம் படியில் நடந்த அதிர்ச்சி.. ஐகோர்ட் கறார்
சபரிமலை ஐயப்பன்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட போலீசார், 18 ஆம் படிக்கட்டில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சர்ச்சையானது.
இந்நிலையில் 18ஆம் படியில் நின்று புகைப்படம் எடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட, SAP முகாமிற்கு 23 காவலர்களை நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு தேவசம் அமர்வு, சபரிமலை 18வது படியில் நின்று போலீசார் புகைப்படம் எடுக்கும் சம்பவத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் சபரிமலையில் போலீசார் பாராட்டுக்குரிய செயல்களை செய்து வருவதாகவும், பக்தர்களின் பாதுகாப்பான யாத்திரைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சன்னிதானத்தில் காவல்துறை அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது என்றும் ஆனால் இது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என தெரிவித்தது.