கேரளாவில், ஸ்கூட்டரில் சென்ற தங்க வியாபாரியை காரில் இடித்து தள்ளிய கும்பல் ஒன்று, இரண்டு கிலோ தங்கத்தை திருடிச் சென்றனர்.கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே முத்தம்பலத்தில்.
நேற்று இரவு பைஜூ என்ற தங்க வியாபாரி கடையை முடிவிட்டு, ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த கும்பல் ஒன்று ஸ்கூட்டரை இடித்து தள்ளியது. கீழே விழுந்த தங்க வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி,
ஸ்கூட்டரில் வைத்திருந்த இரண்டு கிலோ தங்கத்தை திருடிச் சென்றனர். ஐந்து பேர் கொண்ட நபர்கள் இந்த துணிகரத்தை செய்துள்ளது. பைஜு தங்கம் விற்கும் வியாபாரி என்பதால், பலருக்கு நகைகள் செய்வதற்காக தங்கம் தன்னிடம் இருந்ததாக பைஜு கூறியதைத் தொடர்ந்து கொடுவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பைஜூவுக்கும் காயம் ஏற்பட்டது.