2வது முறையும் தகுதி நீக்கம் - எம்.பி பதவி கனவை புரட்டி போட்ட நிதிமன்றம்

Update: 2023-10-05 17:18 GMT

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம், கவரத்தி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, முகமது பைசல் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை, கேரள உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இதனையடுத்து, முகமது பைசல் மீண்டும் எம்.பியாக பதவி வகித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், முகமது பைசல் குற்றவாளி என, லட்சத்தீவு அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் 2வது முறையாக முகமது பைசல் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்