91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம்
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்த, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
போதிய வடிகால் வசதி இல்லாததாலும், மழை காரணமாகவும் முதல் நான்கு நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்நிலையில், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக இன்று நடைபெற இருந்த ஐந்தாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்திய 91 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.