குழந்தைகள், சிறுவர்களை கொன்று குவிக்கும் புது கொலைகார வைரஸ்.. மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு
குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சண்டிபுரா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து ஆலோசனை நடைபெற்றது.
குறிப்பாக, இந்த வைரஸ் மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரமாக இருப்பது மட்டுமே இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒரே நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்றால் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், இதன் தாக்கம் சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி சண்டிபுரா வைரஸால் 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக குஜராத்தில் 75 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 28 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.