ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்... 78 நாள் தீபாவளி போனஸ்.. மத்திய அரசு ஒப்புதல்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 11 லட்சத்து 72 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 29 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தகுதியான ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக 17 ஆயிரத்து 951 ரூபாய் போனசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.