சாக்கடை நீரில் சமைத்த பிரியாணி.. அண்டாவை கிண்டிய அதிகாரிகள் - கிளற கிளற கிளம்பிய குபீர் நாற்றம்
அரியானா மாநிலம் பிஞ்சோர் நகரில் இயங்கி வரும் பிரியாணி கடை ஒன்றில், அப்பகுதி மக்கள் பார்சல் வாங்கியுள்ளனர். அப்போது, கடை வளாகத்தில் துர்நாற்றம் வீசியதால், கடையை சோதனை செய்தனர். அப்போது, கழிவுநீர் கால்வாயோடு இணைக்கப்பட்ட குழாய் ஒன்று உணவு தயாரிக்கும் இடத்தோடு இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், கழிவுநீரில் பிரியாணி சமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி, கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செல்போனில் படம் எடுத்துக்கொண்டு, போலீசில் புகார் அளிக்க முயன்ற போது, இனி இதுபோன்று நடக்காது, பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க உரிமையாளர் முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள கலிங்கா உரிமைகள் என்னும் அமைப்பினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.