10.5கிமீ... காட்டும் போதே இடிந்து விழுந்த நாட்டின் நீளமான பாலம்... பலியான உயிர் - அதிர்ச்சியில் பீஹார்
பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் சுபாலில் கோசி ஆற்றின் குறுக்கே ரூபாய் 1200 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த பாலம் நாட்டிலேயே மிக நீளமான சாலைப் பாலமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் பாலத்தின் 50, 51 மற்றும் 52 ஆகிய மூன்று தூண்களின் கர்டர்கள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் இறந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.