"தற்போதைக்கு அயோத்தி செல்வதை தவிர்க்க வேண்டும்".. மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
தற்போதைக்கு அயோத்தி செல்வதை மத்திய அமைச்சர்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி
தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிடம் இதுபோன்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்லும்போது, தரிசனத்திற்கு செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, மார்ச் மாதம் அமைச்சர்கள் அயோத்தி செல்வார்கள் என கூறப்படுகிறது.