``நம்ம பொண்ணு நம்மள விட்டு போய்ட்டாளே’’ -தாய் கதறிய போதே பாறையில் மகள் மறுபிறவி எடுத்து வந்த அதிசயம்

Update: 2024-10-29 07:19 GMT

செல்ஃபி மோகத்தால் நீரூற்றுக்குள் தவறி விழுந்த பெண் ஒருவர், சுமார் 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணியில் மீட்கப்பட்டிருக்கிறார். சினிமாவை மிஞ்சும் திகில் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


செல்ஃபி மோகத்தால் கால் இடறி நீரூற்றுக்குள் விழுந்து, கர்நாடகாவின் மந்திரகிரி மலைப்பகுதியையே பதைபதைக்க வைத்திருக்கிறார் இந்த 19 வயது இளம் பெண்..

இதில், உயிரிழந்ததாக கருதப்பட்ட இவர், சுமார் 19 மணி நேரத்திற்கு பிறகு மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகை சம்பவம் போல் பாறை இடுக்குகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது சுற்றுலா பயணிகளை ஆட்டம் காணச் செய்திருக்கிறது...

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவரான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து இயற்கை அழகை ரசிக்க மந்திரகிரி மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்..

செல்ஃபி மோகத்தில் விபரீதம் அறியாமல், அங்கிருந்த நீருற்றின் உச்சிக்கு சென்ற இவர், கால் இடறி நீரூற்றின் ஆழமான பகுதியில் விழுந்தது சக சுற்றுலா பயணிகளை பதற வைத்தது..

உடனே கத்தி கூச்சலிட்டு பெண்ணின் நிலை குறித்து அறிய மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணியில் நண்பர்கள் துடிதுடித்திருக்கின்றனர்..

ஆனால், உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வராத நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர்.. சுமார் 19 மணி நேரத்திற்கு பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு இடையே, நீரூற்றுக்கான மாற்று வழியை கண்டறிந்து உள்ளே இறங்கியிருக்கின்றனர்..

இந்நேரம் பெண்ணின் உயிருக்கு ஏதாவது நேர்ந்திருக்கும் என இறங்கிய வீரர்கள், உள்ளே பாறை இடுக்குகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை உயிருடன் மீட்டு வந்தது சினிமாவை மிஞ்சிய திகிலை உண்டாக்கியது..

மறுபிறவி எடுத்து வந்த பெண்ணை.. அவரின் நண்பர்களும், குடும்பத்தாரும் கண் கலங்கி பார்த்து நின்றது மனதை கலங்கடித்தது..

சுற்றுலா தலங்களில் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் இது போன்ற விபரீதங்கள் தொடர்கதையாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்