வெறும் ரூ.1000 போன் வச்சிருந்த மனைவி இன்று ராஜ வாழ்க்கையோடு `இன்ஸ்டா குயின்’ ஆன ரகசியம்

Update: 2024-10-29 09:12 GMT

படாத பாடு பட்ட கணவன் - வெறும் ரூ.1000 போன் வச்சிருந்த மனைவி இன்று ராஜ வாழ்க்கையோடு `இன்ஸ்டா குயின்’ ஆன ரகசியம்

சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பார்க்கலாம்.. விரிவாக..

கொல்லம் மாவட்டம் பஜன்மத் பகுதியைச் சேர்ந்த "முபீனா" என்பவர் தான், இந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்..

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கத்தை திருடி இவர் கைவரிசை காட்டியுள்ளார். தொடர்ந்து, இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

முபீனாவின் அண்ணி முனீராவின் வளையல், ப்ரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் திருடப்பட்டன. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இதை அறிந்த முனீரா அதிர்ச்சி அடைந்தார்.. வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், செப்டம்பர் 30ஆம் தேதி முபீனா வீட்டிற்கு வந்து போயிருக்கிறார்.

முபீனாவைத் தவிர வேறு யாரும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த முனீரா, கடைசியில் முபீனா மீது சித்தாரா போலீசில் புகார் அளித்திருக்கிறார்..

அவரது நண்பர் அமானியா என்பவர் ஜனவரி மாதம் இதே சித்தாரா காவல்நிலையத்தில் அளித்த மற்றொரு நகை திருட்டு புகாரில், இதே முபீனா மீது போலீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது.. அமானியா, முனீரா ஆகிய இருவரது வீட்டிலும் நகை திருடு போயிருக்கிறது.. இருவரின் வீட்டிற்கும் முனீபா வந்துபோன சிசிடிவி காட்சிகள் போலீஸ்க்கு மேலும் சந்தேகத்தை அதிகரித்து உள்ளது..

இதனால், தங்களது விசாரணை வளையத்திற்குள் இன்ஸ்டாகிராம் பிரபலம் முபீனாவை போலீஸ் கொண்டு வந்துள்ளது...

விசாரணையில், ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவரின் கணவர் வெளிநாடு சென்றிருக்கிறார்.. அதன்பிறகு, ஆடம்பரமாக வாழ போதிய பணமின்றி ரூ.1000 மதிப்புள்ள செல்போனைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால், ஆடம்பரமாக வாழ என்ன வழி என யோசித்த முபீனாவிற்கு இந்த மாதிரி திருடும் யோசனை ஏற்பட்டதாக தெரியவருகிறது..

ஆரம்பத்தில் திருட்டை மறுத்த முபீனா, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்டார்..

முபீனா அளித்த வாக்குமூலத்தின் படி, திருடிய சில நகைகளை விற்றுவிட்டதாகவும், எஞ்சிய நகைகளை வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார், இன்ஸ்டா பிரபலம் முபீனா...

தொடர்ந்து வீட்டில் இருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார், முபீனாவை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்