'ஒற்றுமை ஓட்டம்' - தலைநகரில் தொடங்கி வைத்தார் அமித்ஷா

Update: 2024-10-29 09:06 GMT

மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, டெல்லியில் ஒற்றுமை ஓட்ட நிகழ்வை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில், மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, மனோகர் லால் கட்டார், நித்யானந்த் ராய், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, தீபாவளிப் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுவதால், இம்முறை ஒற்றுமை ஓட்ட நிகழ்வை இன்றே நடத்த முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்