காட்டுக்குள் கதறிய மூன்றரை வயது பெண் குழந்தை... துடிதுடிக்க சீரழித்த `சாக்லேட்’ கொடூரன்

Update: 2024-11-02 09:41 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதியில், மூன்றரை வயது சிறுமியை சாக்லேட் கொடுத்து காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை புதைத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

திருப்பதி வடைமாலைபேட்டை மண்டலம், அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த சிறுமியை பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 22 வயது இளைஞர் சுஷாந்த், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்று, வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொன்றுவிட்டு உடலை புதைத்துள்ளார். சிறுமியை பெற்றோர் தேடி வந்த நிலையில், சுஷாந்தை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து குற்றத்தை சுஷாந்த் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்