"ஆங்கிலேயர் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்" - நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

Update: 2023-08-09 02:57 GMT

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின் போது பல்வேறு பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, நாடாளுமன்ற நிலைக்குழு தனது 133 வது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மத்திய பணியாளர் நலன், பொது குறைதீர் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு, தனது 133வது அறிக்கயை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் அரசியல் சட்டப் பிரிவுகளில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 60 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஒட்டுமொத்தமாக அத்தனை நீதிபதிகளும் விடுமுறையில் செல்லும் வகையில் பின்பற்றப்படும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் சொத்துக் கணக்குகளை வெளியிடும் வகையில் அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நிலைக்குழு அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்