மேற்கு வங்கத்தில் பயணிகள் விமான விபத்து - விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு
மேற்குவங்கத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து நேற்று மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட டர்புலன்ஸ் காரணமாக பயங்கரமாக குலுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 11 பயணிகளுக்கு பலத்த காயமும், 40 பயணிகளுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து, காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த விபத்து குறித்து இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் கவனத்துடன் இந்த விவகாரம் கையாளப்பட்டு விரைவில் விபத்திற்கான காரணம் உள்ளிட்டவை வெளியிடப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.